நள்ளிரவில் கள்ளக்காதலியுடன் இருந்த கணவன் - ரவுண்டு கட்டிய மனைவியின் குடும்பத்தினர்!
நடு இரவில் கணவர் தனது கள்ளகாதலியுடன் இருந்ததை மனைவி மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்காதல்
நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் ராஜா. இவருக்கு மனைவி மற்றும் குழந்தை உள்ளது, இவர் நெல்லை வடக்கு தாழையூத்தில் வசித்து வருகிறார். இவருக்கும் வடக்கு தாழையுத்தைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் 30 வயதான மீனா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பெண்ணுக்கு 3 குழந்தைகள் உள்ளனர், இவரது கணவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவருக்கும்ந கொரோனா காலகட்டத்தில் பழக்கம் ஏற்பட்டது, அது நாளடைவில் காதலாக மாறியது. இந்த விஷயம் ராஜாவின் மனைவிக்கு தெரியவந்தது, அவர் போலீஸிடம் புகாரளித்தார், அப்பொழுது இருவரையும் எச்சரித்து அனுப்பினர்.
மடக்கி பிடித்த குடும்பத்தினர்
இந்நிலையில், மீனா பேட்டை பகுதிக்கு குடியேறினார், அப்பொழுதும் இருவரும் அவர்களது கள்ளக்காதலை வளர்த்து வந்தனர். இதனையறிந்த ராஜாவின் மனைவி இவர்களை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டார். அதுபோல நேற்று முன்தினம் இரவில் ராஜா கள்ளக்காதலி வீட்டில் தங்கி இருக்கிறார்.
நள்ளிரவு 11 மணியளவில் அந்த இளம்பெண்ணின் வீட்டை ராஜாவின் மனைவி, அவருடைய தந்தை, சகோதரர்கள், உறவினர்கள் சுற்றி வளைத்து கதவை தட்டினார்கள். வெகு நேரமாகியும் அவர்கள் கதவை திறக்கவில்லை,
பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவை தட்டியதும் திறந்துள்ளனர். அப்பொழுது போலீசார் இருவரையம் எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.