இரவில் பெண்களுக்கு பாதுகாப்பான பயணம் - தமிழக காவல்துறையின் திட்டம்
இரவில் பெண்கள் போலீஸ் வாகனங்களில் பாதுகாப்பாக பயணிக்கலாம் என்ற திட்டம் காவல் துறையால் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
பெண்கள் பாதுகாப்பு
நாட்டில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதன் படி இரவில் தனியாக செல்லும் பெண்கள் பாதுகாப்பற்றதாக உணரும் போது, காவல்துறை கட்டுப்பாட்டுக்கு அறைக்கு அழைத்தால் காவல் துறை வாகனத்தில் இலவசமாக அழைத்து செல்லப்படுவார்கள். இந்த தகவலை அனைவருக்கும் பகிருங்கள் என்ற பதிவு சமூக ஊடகங்களில் வைரலானது.
அழைப்பு எண்
இந்நிலையில் தமிழ்நாடு உண்மை அறியும் குழு அது தொடர்பாக விளக்கமளித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பதிவில் உள்ள உதவி எண் 1091 மற்றும் 7837018555 தவறாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
Women's safety at night: The number is incorrect, the message is accurate!@CMOTamilnadu @TNDIPRNEWS pic.twitter.com/AkOACHc7p5
— TN Fact Check (@tn_factcheck) September 4, 2024
மேலும், 044-23452365 மற்றும் 044- 28447701 இந்த எண்ணில் அழைத்தால் காவல் துறையின் ரோந்து வாகனத்தில் பாதுக்காப்பாக அழைத்து செல்வார்கள் என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த திட்டம் கடந்த ஒரு வருடமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.