பெண்ணை நிர்வாணமாக்கி வாலிபர் செய்த காரியம் - 50 இடங்களில் வெட்டுக்காயம்!
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இளம்பெண் நிர்வாணமாக வெட்டுக்காயத்துடன் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் நிலையம்
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நேற்று இரவு 9 மணி அளவில் அங்கு உள்ள 3-வது நடைமேடையில் இளம்பெண் ஒருவர் நிர்வாண நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அவரது உடல் முழுவதும் சுமார் 50 இடங்களில் பிளேடால் அறுக்கப்பட்டு இருந்தது.
மேலும், முகம், கை, கால் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பலத்த காயம் காணப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் உடனடியாக திருவள்ளூர் ரயில்வே போலீசுக்கு தெரிவித்தனர்.
விசாரணை
இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடி கொண்டிருந்த அந்த பெண்ணை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.
மேலும், விசாரணையில் அந்த இளம்பெண் அண்ணனூர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவர் அம்பத்தூரை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருவள்ளூர் வந்ததாக தெரிகிறது.
இவரை நிறைவான படுத்தி உடலில் பல இடங்களில் கிழித்துவிட்டு, தப்பி சென்றுள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.