திருவள்ளூர் மக்கள் அலர்ட்; இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை பெய்யக்கூடும்
தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியதை அடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழக மற்றும் புதுச்சேரியிரில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 18 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் சோழவரம், தாமரைப்பாக்கம், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது