வீட்டில் யாருமில்லை..நாத்தனார் மகனுடன் உல்லாசம் - பெண் கொடூர கொலை!
கள்ளக்காதலனுடன் உல்லாசமாய் இருந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
வீட்டில் உல்லாசம்
கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னமுத்தூர் அருகே உள்ளது மேட்டு கொல்ல கொட்டாய். இந்த ஊரை சேர்ந்தவர் தான் கூழித்தொழிலாளியான பழனி(40). இவரது மனைவி சத்யா (36). இவர்களுக்கு திருப்பதி (18), கேசவன் (16) என்ற 2 மகன்கள் உள்ளனர். பழனியின் அக்கா மகன் தான் மாரியப்பன் (25).
இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் வேலை செய்து வந்தார்.அதனால் அவர் பழனியின் வீட்டில் தங்கி வருகிறார். இந்த சூழ்நிலையில், மாரியப்பனுக்கும் சத்யாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலானது.
இதனை அறிந்த அவரது கணவர் மற்றும் மகன்கள் சத்யாவை பலமுறை கண்டித்தும் அவர் கள்ளக்காதலை கைவிடவில்லை. இந்த நிலையில், பழனி வேலைக்கு வேலைக்கு சென்று விட்டார். அதேபோல இரு மகன்களும் வெளியில் சென்று விட்டனர். அப்போது திடிரென அலறல் சத்தம் கேட்டது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று பார்த்தன.
கொடூர கொலை
அங்கு கழுத்து அறுபட்ட நிலையில் சத்யா பிணமாக கிடந்தார். அருகில் மாரியப்பன் வெட்டு காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் சத்யாவை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும்,
மாரியப்பனை சிகிச்சைகாகவும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அதில், யாருமில்லாத நேரத்தில் சத்யாவின் வீட்டிற்கு வந்து அவருடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயம் வீட்டுக்கு வந்த சத்யாவின் மகன்களோ, கணவனோ இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம்?
அல்லது மாரியப்பன் சத்யாவின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தாரா? என்பது தெரியவில்லை. இருப்பினும், கொலையாளி யார்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.