இப்படி பண்றீங்களேமா; 270 முறை traffic rules மீறிய பெண்- எவ்வளவு அபராதம் தெரியுமா?

Karnataka Bengaluru
By Swetha Apr 16, 2024 09:41 AM GMT
Report

போக்குவரத்து விதிகளை 270 முறை மீறிய பெண்ணுக்கு ரூ 1.36 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

270 முறை  மீறிய பெண் 

கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஓட்டி வரும் ஸ்கூட்டரில் தொடர்ந்து போக்குவரத்து விதிகளை 270 முறை மீறியுளார். அண்மையில் ஹெல்மெட் அணியாமல் தனது ஸ்கூட்டரில் 3 பேரை ஏற்றிக்கொண்டு சென்றிருக்கிறார்.

இப்படி பண்றீங்களேமா; 270 முறை traffic rules மீறிய பெண்- எவ்வளவு அபராதம் தெரியுமா? | Women Broke Traffic Rules 270 Times In Bengaluru

அப்போது அவருக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்து ரசீது வழங்கினர்.அதில் ரூ.1.36 லட்சம் அபராதத் தொகை குறிப்பிடித்திருந்தது.அதனை பார்த்து பதறிய அந்த பெண்னுக்கு, அவர் இதுவரை செய்த விதிமீறல்களின் அபராத கட்டணம் என்று தெரியவந்துள்ளது.

வாகன ஓட்டிகளே...இனி உஷாரா இருங்க !!சென்னையில் வரும் புதிய கட்டுப்பாடுகள்!!

வாகன ஓட்டிகளே...இனி உஷாரா இருங்க !!சென்னையில் வரும் புதிய கட்டுப்பாடுகள்!!

எவ்வளவு அபராதம்?

இவர் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, தலைக்கவசம் இல்லாமல் பயணியை பின்னால் அமர வைத்துச் சென்றது, தவறான திசையில் வாகனத்தை ஓட்டிச் சென்றது, வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பேசியது, போக்குவரத்து சிக்னல்களை மதிக்காமல் கடந்து செல்வது போன்ற பல்வேறு வகையான விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளார்.

இப்படி பண்றீங்களேமா; 270 முறை traffic rules மீறிய பெண்- எவ்வளவு அபராதம் தெரியுமா? | Women Broke Traffic Rules 270 Times In Bengaluru

இந்த சம்பவங்கள் அனைத்தும் பெங்களூரு போக்குவரத்து போலீஸார் சார்பில் சாலைகளில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.இந்த நிகழ்வை எடுத்து காட்டாக சொல்லி இதுபோன்ற அபராதங்களில் சிக்காமல் இருக்கவும், பாதுகாப்பு கருதியும் வாகன ஓட்டிகள் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு பெங்களூரு போக்குவரத்து போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.