வாகன ஓட்டிகளே...இனி உஷாரா இருங்க !!சென்னையில் வரும் புதிய கட்டுப்பாடுகள்!!
வரும் நவம்பர் 4-ஆம் தேதி முதல் சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
போக்குவரத்து பிரச்சனை
சென்னையை பொறுத்தமட்டில் சாலையில் வாகனங்கள் வேகமாக செல்வதும் பெரும் விபத்துகளை சந்தித்து வருகின்றது. வேகக்கட்டுப்பாடுகள் பல இடங்களில் இருந்தும் அதனை பெரும்பாலான மக்கள் இதனை முறையாக பின்பற்றுவதில்லை.
அதன் காரணமாக தான், பல விபத்துகளை சென்னை தினமும் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தான், தற்போது தமிழக போக்குவரத்து துறை வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை பெருநகரத்தில் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு வாகன ஓட்டிகள் வேகவரம்பை கடைபிடிப்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. தற்போது சென்னையில் மட்டும் 62.5 லட்சம் வாகனங்கள் இயங்கி வருகின்றன.
புதிய கட்டுப்பாடுகள்
இந்தச் சூழ்நிலையில், சாலைப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சாலையைப் பயன்படுத்துபவர்கள் போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளை கடுமையாகப் பின்பற்றுவது பாதுகாப்பான போக்குவரத்து சூழலுக்கு வழி வகுக்கும், இதனால் குறிப்பாக, விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மட்டுமல்லாமல் மற்ற சாலைப் பயணிகளையும் பாதிப்படைய செய்யும் என்பதால் வேக வரம்பு விதிமுறைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
அதன்படி, 2003ம் ஆண்டில் விதிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களுக்கான வேக வரம்புகளை சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையால் மாற்றியமைத்துள்ளது. புதிதாக நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்புகள்படி, சென்னையில் இரவு 10 மணி முதல் காலை 7 மணிவரை ஆட்டோக்கள் 35 கி.மீ வேகத்திலும், காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 25 கி.மீ வேகத்திலும் செல்லலாம்.
அதேபோல் கனரக வாகனங்கள் இரவு 10 மணி முதல் காலை 7 மணிவரை ஆட்டோக்கள் 40 கி.மீ வேகத்திலும், காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 35 கி.மீ வேகத்திலும் செல்லலாம். இலகுரக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் இரவு 10 மணி முதல் காலை 7 மணிவரை ஆட்டோக்கள் 50 கி.மீ வேகத்திலும், காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 40 கி.மீ வேகத்திலும் செல்லலாம்.