நண்பனின் மனைவியை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய இளைஞர் - பகீர் பின்னணி!
கேரளாவில் தான் குடுத்த கடனை திருப்பி கேட்டதால் பெண்ணை கடத்தி சென்று, துண்டு துண்டாக வெட்டி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலக்காடு
கேரளா மாநிலம், பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் சனல், இவருடைய மனைவி ஆதிரா (வயது 27). சனலின் நண்பர் அகில் (31). அகிலும், ஆதிராவும் அங்கமாலியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்தனர். அகிலுக்கு பொருளாதார நெருக்கடி வரும் போதெல்லாம் ஆதிரா பணம் மற்றும் நகை கொடுத்து உதவியுள்ளார்.
அதனை அவர் அகிலிடம் திருப்பி கேட்ட பொழுது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், கடந்த 29-ந் தேதி முதல் ஆதிராவை காணவில்லை, அவரை ஆதிராவின் கணவர் மற்றும் உறவினர்கள் தேடினார்கள், எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. அதனால் அங்கமாலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆற்றில் கிடந்த சடலம்
இதனை தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்பொழுது அவரின் போனை ஆய்வு செய்ததில், கடைசியாக அவர் அகிலுடன் பேசியிருந்து தெரியவந்தது.
மேலும், அக்கம் பக்கத்தில் விசாரணை நடத்தியதில் அகில் தனது காரில் ஏற்றி சென்றதாக கூறியுள்ளனர். இந்நிலையில், அகிலை தேடி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் தான் தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
மேலும், ஆதிராவை நான் தான் கடத்திச் சென்று அதிரப்பள்ளி அருகே உள்ள ஆற்றுப்பகுதியில் வைத்து கழுத்தை நெரித்து கொன்றதாவும், அவரின் உடலை துண்டு, துண்டாக வெட்டி ஆற்றில் வீசியதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஆதிரா தன்னிடம் கடனாக தந்த நகை மற்றும் பணத்தை திருப்பிக் கேட்டதால் அவரை கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து போலீசார் அதிரப்பள்ளி ஆற்றுக்கு சென்று அங்கு ஆற்றின் கரையில் ஆதிராவின் கால் மற்றும் உடல் பாகங்கள் கிடந்தன.
அதனை கைப்பற்றிய போலீசார் திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும், மற்ற பாகங்களை தேடி வருகிறார்கள். இச்சம்பவம் குறித்து அகிலை போலீசார் கைது செய்தனர்.