நிர்வாணமாக பால்கனியில் போஸ் கொடுத்த பெண்கள் கைது
ஐக்கிய அரபு அமீரகத்தில் நிர்வாண கோலத்தில் போஸ் கொடுத்த பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் பொது இடங்களில் முத்தமிடுவது அல்லது உரிமம் இல்லாமல் மது அருந்துவது, அநாகரீக உடை அணிவது போன்றவற்றிற்கு தடை உள்ளது.
இவ்வாறு கடுமையான கட்டுப்பாடுகள் இருந்து வரும் நிலையில் துபாயின் மெரினா பகுதியில் பால்கனியில் பெண்கள் கும்பலாக நிர்வாண போஸ் கொடுத்து உள்ளனர். இதுகுறித்த வீடியோவும், படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த பெண்கள் விளம்பரத்திற்காக பால்கனியில் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பெண்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது போன்று செயல்களில் ஈடுபட்டால் 6 மாத சிறைத்தண்டனையும் 1000 டாலர் அபராதமும் விதிக்கப்படும். "அநாகரீகமான" வீடியோ தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக துபாய் போலீசார் தெரிவித்தனர்.