அதிக மகிழ்ச்சியாக இருப்பது Single ஆண்களா..பெண்களா? வெளியான ஆய்வு முடிவு!

England World
By Swetha Dec 17, 2024 05:45 PM GMT
Report

சிங்கிளாக இருக்கும்போது அதிக மகிழ்ச்சியாக இருப்பது யார்? என்ற ஆய்வின் முடிவு வெளியாகியுள்ளது.

அதிக மகிழ்ச்சி

காதல் வாழ்க்கையை வெறுத்து தனியாக வாழ்வதே மேல் என்ற லட்சியத்துடன் இருக்கும் நபர்கள்தான் தன்னை சிங்கள் என்று சொல்லி சுற்றி திரிபவர்களாவார். இந்த நிலையில் இது குறித்து சில ஆய்வு முடிவுகளும் வெளியாகி இருக்கின்றன.

அதிக மகிழ்ச்சியாக இருப்பது Single ஆண்களா..பெண்களா? வெளியான ஆய்வு முடிவு! | Women Are Most Happiest In Single Life Says Report

அதாவது இது தொடர்பாக நடந்த சமீபத்திய ஒரு ஆய்வின் முடிவில், ‘single ஆக இருக்கும் ஆண்களைவிட single ஆக இருக்கும் பெண்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்’ என தெரியவந்துள்ளது.

2020 - 2023 க்கு இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்ட 10 ஆய்வுகளின் தரவுகளைக் கொண்டு இந்த ஆய்வின் முடிவானது வெளியாகியுள்ளது. இந்த ஆய்வுக்காக single ஆக இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் என சுமார் 5,941 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மதுபானங்கள் சைவமா..அசைவமா? அதை எப்படி தெரிந்துகொள்வது? ஆய்வின் முடிவு!

மதுபானங்கள் சைவமா..அசைவமா? அதை எப்படி தெரிந்துகொள்வது? ஆய்வின் முடிவு!

ஆய்வு முடிவு

18 முதல் 75 வயது வரையில் இருப்பவர்களும் சராசரியாக 31 வயது இருப்பவர்களும் இதற்காக தேர்வாகினர். இவர்களிடத்தில் தற்போதையை வாழ்க்கை நிலையில் உள்ள திருப்தி, பாலியல் தேவை, காதல் துணை குறித்தான கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதிக மகிழ்ச்சியாக இருப்பது Single ஆண்களா..பெண்களா? வெளியான ஆய்வு முடிவு! | Women Are Most Happiest In Single Life Says Report

அதன் முடிவில், சிங்கிளாக இருக்கும் பெண்கள் சராசரியாக காதல் மட்டுமின்றி நட்பு, குடும்பம் போன்ற உறவுகளின் மூலம் சந்தோஷத்தை பெறுவதும், திருமணம் அல்லது காதல் போன்றவற்றில் ஈடுபடாமல் இருப்பது உடல்நலன், வேலை, பயணம் ஆகியவற்றை மேம்படுத்தும் வாய்ப்பாக கருதுவதும் தெரியவந்துள்ளது.

மேலும், ஆண்களை விட சிங்கிளாக இருக்கும் பெண்களே வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சியாக இருப்பதாக இங்கிலாந்தின் nottingham பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கூறப்படுகிறது.