மதுபானங்கள் சைவமா..அசைவமா? அதை எப்படி தெரிந்துகொள்வது? ஆய்வின் முடிவு!
மதுபானங்கள் சைவமா? அசைவமா? என்பது குறித்து ஆய்வு முடிவுகளை பார்க்கலாம்.
சைவமா..
மதுபானங்கள் நொதித்தல் முறையில் தயாரிக்கப்படுகின்றன. அந்த கலவையில் ஈஸ்ட் என்னும் பொருள் பயன்படுத்தப்படுகிறது. இது பூஞ்சை வகையை சேர்ந்தது என்பதால் மதுபானங்களில் வெஜிடேரியன் பொருட்கள் உள்ளன.
மதுபானம் உருவாக்குதலில் தானியங்கள், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன. இவை சைவம் என்று அனைவரும் தெரிந்ததுதான்.பீர், ஒயின் போன்ற சில மதுபானங்களில் விலங்குகளின் கொழுப்புகள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
எனவே சில ஒயின் வகைகள் அசைவ வகையாக இருக்க வாய்ப்புள்ளது.எனினும், சில நிறுவனங்கள் மதுபாட்டில்களில் அது சைவமா அல்லது அசைவமா? என்பதை குறிப்பிட்டிருக்கும்.
அசைவமா?
குறிப்பாக பச்சை வண்ண வட்ட குறியீடு வெஜிடேரியன் என்பதை குறிக்கும். வோட்கா, விஸ்கி, ரம் போன்றவற்றில் விலங்குகளின் பொருட்கள் ஏதும் சேர்க்கப்படாது என்பதால் இவற்றை வெஜிடேரியன் என்றே கருதலாம்.
கலாசார அடிப்படையில் சிலருக்கு மதுபானங்கள் வெஜிடேரியன் வகையை சேர்ந்தது என்று கருதப்படலாம். சில நம்பிக்கைகளை மது அருந்துவதற்கு தடை விதித்துள்ளன. இது அவரவர் தனிப்பட்ட விருப்பங்களை சார்ந்தது.
அதேபோல வீகன் எனப்படும் முழுமையாக வெஜிடேரியனை மட்டுமே உண்பவர்கள், மதுபாட்டில் லேபிள்களில் வீகன் குறியீடு உள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ளலாம். பல்வேறு ஊடக தளங்களில் வெளியான அடிப்படையில் மட்டுமே இந்த தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.