கைக்குழந்தையுடன் பள்ளத்தில் தவறி விழுந்த பெண் - பகீர் சிசிடிவி காட்சி

Viral Photos Virudhunagar
By Sumathi Aug 22, 2024 07:57 AM GMT
Report

 பள்ளத்தில் கைக்குழந்தையுடன் பெண் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலை பணிகள்

விருதுநகர், சாத்தூரில் பல்வேறு இடங்களில் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அந்த வகையில், பல கோடி ரூபாய் மதிப்பில் நெடுஞ்சாலை துறை சார்பில், வாறுகால் அமைத்தல்,

sattur

சாலை அகலப்படுத்துதல், பேவர் பிளாக் கல் பதித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்நிலையில், அங்கு சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையின் காரணமாக சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது.

கைக்குழந்தை மீது சானிடைசர் ஊற்றி தீ வைத்த கொடூர தாய் - நெருப்பில் துடிதுடித்த குழந்தை - அதிர்ச்சி சம்பவம்

கைக்குழந்தை மீது சானிடைசர் ஊற்றி தீ வைத்த கொடூர தாய் - நெருப்பில் துடிதுடித்த குழந்தை - அதிர்ச்சி சம்பவம்

பொதுமக்கள் கோரிக்கை

இந்நிலையில், சாத்தூர்-மதுரை பஸ் நிறுத்தம் அருகே 3 பெண்கள் கைக்குழந்தையுடன் தேசிய நெடுஞ்சாலையை கடந்து வந்துள்ளனர். அவர்களில், கைக்குழந்தையுடன் வந்த பெண்மணி பஸ் நிறுத்தம் அருகே உள்ள கடையை நோக்கி வந்தபோது நீர் நிரம்பிய பள்ளத்தில் எதிர்பாராவிதமாக தவறிவிழுந்துள்ளார்.

கைக்குழந்தையுடன் பள்ளத்தில் தவறி விழுந்த பெண் - பகீர் சிசிடிவி காட்சி | Women And Child Has Injured After Felldown

இதனைப்பார்த்த அக்கம் பக்கத்தினர், பள்ளத்தில் விழுந்த தாய் மற்றும் குழந்தையை மீட்டனர். இதுதொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

உடனே, அங்குவந்த நெடுஞ்சாலைத்துறையினர், இரவில் ஜல்லி மற்றும் சிமெண்ட் கலவைக்கொண்டு அந்த பள்ளத்தை மூடி சரி செய்தனர். இதனையடுத்து, விபத்துகளை தவிர்க்க குழிகளுக்கு அருகில் எச்சரிக்கை பலகைகள் வைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.