பசியால் தவித்த கைக்குழந்தை; பெண் பயணியின் நெகிழ்ச்சி செயல் - இனிப்பு வழங்கிய போலீசார்!

Tamil nadu Madurai
By Jiyath Mar 18, 2024 05:36 AM GMT
Report

தாய் இன்றி பசியால் அழுத 3 மாத பச்சிளங்குழந்தைக்கு, பெண் பயணி ஒருவர் தாய்ப்பால் ஊட்டிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அழுத குழந்தை 

சென்னையிலிருந்து மதுரை நோக்கி வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 மாத கைக்குழந்தையுடன் ஆண் பயணி ஒருவர் வந்துள்ளார். அந்த குழந்தை பசியால் நீண்ட நேரம் அழுததை பார்த்த சக பயணி ஒருவர், அவர் குழந்தையை கடத்தி செல்கிறார் என்று சந்தேகித்து காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

பசியால் தவித்த கைக்குழந்தை; பெண் பயணியின் நெகிழ்ச்சி செயல் - இனிப்பு வழங்கிய போலீசார்! | Woman Feed Milk 3 Month Baby Who Cries Of Hunger

இதனையடுத்து அந்த நபரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் குழந்தையின் தந்தை எனவும், கணவர் - மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக கோவித்துக்கொண்டு குழந்தையை தூக்கி வந்ததும் தெரியவந்தது.

ரீல்ஸ் மோகம்: குளத்தில் தீ வைத்து டைவ் அடித்து விபரித சாகசம் - இருவர் கைது!

ரீல்ஸ் மோகம்: குளத்தில் தீ வைத்து டைவ் அடித்து விபரித சாகசம் - இருவர் கைது!

நெகிழ்ச்சி செயல் 

பின்னர் இதுகுறித்து அவரின் மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குழந்தையை ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் செய்தனர். ஆனால் அந்த குழந்தை பசியால் நீண்ட நேரம் அழுதுகொண்டே இருந்துள்ளது.

பசியால் தவித்த கைக்குழந்தை; பெண் பயணியின் நெகிழ்ச்சி செயல் - இனிப்பு வழங்கிய போலீசார்! | Woman Feed Milk 3 Month Baby Who Cries Of Hunger

அப்போது கோயம்புத்தூர் நோக்கி செல்வதற்காக நின்றுகொண்டிருந்த பெண் பயணி ஒருவர், குழந்தையின் பசியை உணர்ந்து தாய்ப்பால் கொடுத்துள்ளார். அவரின் இந்த செயலை பார்த்து நெகிழ்ந்த சக பயணிகள் மற்றும் ரயில்வே போலீசார், அந்த பெண்ணை பாராட்டி இனிப்பு வழங்கி வழியனுப்பி வைத்தனர்.