சிறுத்தை தாக்கி 3 வயது குழந்தை உட்பட இருவர் பலி - முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு!
றுத்தை தாக்கி உயிரிழந்த 3 வயது குழந்தை உட்பட 2 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்
சிறுத்தை தாக்குதல்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் சரிதா என்ற பெண்ணை சிறுத்தை தாக்கியது.
இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையில் கிருத்திகா என்ற 4 வயது சிறுமியை சிறுத்த தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். மேலும் நேற்று தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை 3 வயது சிறுமியை கவ்வி இழுத்துச் சென்று தாக்கியது.
2 பேர் பலி
இதில் பலத்த காயமடைந்த அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தொடர் சிறுத்தை அட்டகாசத்தை தடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த 3 வயது குழந்தை உட்பட 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்