Friday, May 2, 2025

குட் நியூஸ்: சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதி!

Kerala Festival
By Sumathi 2 years ago
Report

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க போலீஸாருக்கு கேரள அரசு அறிவுறுத்தி உள்ளது.

சபரிமலை

மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இதனால் கேரள அரசு சார்பில் பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குட் நியூஸ்: சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதி! | Women Allowed In Sabarimala

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்க வேண்டும் என கடந்த 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றன.

பெண்களுக்கு அனுமதி

உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப் பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டபோது, 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பலர் சபரிமலைக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அவர்களால் செல்ல முடியவில்லை.

பின்னர், உத்தரவுக்கு எதிர்ப்பு மற்றும் கொரோனா பரவல் காரணமாக இதுவரை அமல்படுத்தப்படாமல் இருந்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தற்போது அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என போலீசாருக்கு கேரள அரசு அறிவுறுத்தி உள்ளது.