சாமியே சரணம் ஐயப்பா... கோஷங்கள் முழங்க சபரிமலை கோவில் நடை திறப்பு

Kerala
By Thahir Nov 16, 2022 01:33 PM GMT
Report

மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு 

மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி, ஐயப்பன் கோவிலின் நடையை திறந்து வைத்தார். அதன்படி, பதினெட்டாம் படி இறங்கி சென்று கோயில் முன் உள் அழி குண்டம் ஏற்றப்பட்டு மண்டல பூஜை தொடங்கும்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இருமுடியுடன் வரும் பக்தர்கள் நாளை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

Opening of the Sabarimala temple walk

வெர்ச்சுவல் கியூ மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐப்பன் கோவில் டிசம்பர் 27-ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. மேலும், ஆன்லைன் பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்கு நிலக்கல்லில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, நாளை முதல் ஜனவரி 20-ஆம் தேதி வரை சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை, திருச்சி, மதுரை, கடலூரில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளில் இருக்ககைகளை www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.