சூட்கேஸில் பயங்கர நிலையில் பெண்ணின் உடல் - கணவன் வெறிச்செயல்!

Attempted Murder Uttar Pradesh Crime Death
By Sumathi Oct 20, 2022 12:34 PM GMT
Report

மனைவியின் உடலை சூட்கேஸில் வைத்து, கணவன் சாலையில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகராறு

உத்தரப் பிரதேசம், சுல்தான்பூரை சேர்ந்தவர் ராகுல்(22). இவர் மனைவி பிரியங்கா(20). இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. ராகுல் குருகிராமில் தனியார் நிறுவனம் ஒன்றில் உதவியாளராக வேலை செய்துள்ளார். இவரது சம்பவளம் வீட்டு செலவுகளுக்கே சரியாக இருந்துள்ளது.

சூட்கேஸில் பயங்கர நிலையில் பெண்ணின் உடல் - கணவன் வெறிச்செயல்! | Womans Body Is Found Suitcase Husband Arrested

இந்நிலையில், மனைவி கணவரிடம் செல்போன் வேண்டும், டிவி வேண்டும், பிரிட்ஜ் வேண்டும் என அடிக்கடி சண்டை போட்டுள்ளார். மேலும் பலமுறை கணவனை அடித்துள்ளார். இதனால், சண்டை முற்றிய நிலையில், ராகுல் மனைவியை அடித்து கொலை செய்துள்ளார்.

மனைவி கொலை

அதனைத் தொடர்ந்து, இரவு முழுக்க மனைவியின் பிணத்தை வீட்டில் வைத்தே குழந்தையோடு பொழுது கழித்த ராகுல், அடுத்த நாள் கடைக்கு சென்று பெரிய சூட்கேஸ் வங்கி வந்துள்ளார். அத்துடன் மனைவியின் கையில் கணவர் ராகுலின் பெயர் பச்சை குத்தி இருந்ததால், அந்த பகுதியில் சதையை கத்தியால் கிழித்து நீக்கியுள்ளார்.

மனைவியின் உடலை நிர்வாண நிலையில் சூட்கேஸில் வைத்து, ஆட்டோவில் கொன்று சென்று சவுக் என்ற பகுதியில் சாலையில் வைத்து விட்டு சென்றுள்ளார். அதனையடுத்து, கேட்பார் அற்ற நிலையில் ஒரு சூட்கேஸ் மர்மமாக இருந்துள்ளது. அந்த சூட்கேஸை காவல்துறை கைப்பற்றி திறந்து பார்க்கையில்,

கணவன் சதி

நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்ட பெணிண் உடல் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், தடயங்கள் மற்றும் சிசிடிவி அடையாளங்களை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சம்பவத்தன்று மர்ம நபர் ஒருவர் ஆட்டோவில் வந்து சூட்கேஸை சாலையில் வைத்து விட்டு சென்றுள்ளார்.

ஆட்டோ எண்ணின் அடையாளத்தை வைத்து ஆட்டோ ஓட்டுநரிடம் காவல்துறை விசாரணை நடத்தினர். அப்போது தான் அங்குள்ள சிர்ஹவுல் என்ற கிராமத்தில் இருந்த அந்த நபர் சவாரிக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.

அதன்பின் ராகுலை பிடித்து விசாரத்ததில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.