செக்ஸ் டாய்ஸ்? சூட்கேஸில் வெடிகுண்டா - பதறியடித்து வந்த போலீஸார்!
சூட்கேஸில் வெடிகுண்டு இருப்பதாக பரிசோதனை செய்த போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
சூட்கேஸில் வெடிகுண்டு?
ஜப்பானின் ககேகாவாவில் கல்லறை சதுக்கம் ஒன்று உள்ளது. இந்த கல்லறைக்கு வெளியே உள்ள பார்க்கிங்கில் சூட்கேஸ் ஒன்று இருந்துள்ளது. தனது உறவினருக்கு அஞ்சலி செலுத்த வந்த கூட்டத்தினர் இந்த சூட்கேசை பார்த்துள்ளனர்.

சம்பந்தமே இல்லாத இடத்தில் சூட்கேஸ் கிடந்த நிலையில் பயந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சூட்கேஸ் கிடந்த இடத்தைச் சுற்றி சுமார் 300 மீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
காத்திருந்த அதிர்ச்சி
அவர்களை கண்காணிக்க உள்ளூர் ஊடகங்கள் ஹெலிகாப்டரை அனுப்பியது. முதலில் வெப்ப அலைகளை ஆராயும் கருவி கொண்டு பரிசோதனை செய்யப்பட்டதில் பெட்டிக்குள் என்ன இருக்கிறது என சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை.
தொடர்ந்து, சூட்கேஸை திறந்ததில், உள்ளே இருப்பது செக்ஸ் டாய்ஸ் என்பது தெரியவந்தது. இது குறித்து பேட்டியளித்த காவல்துறை அதிகாரிகள், வெடிபொருட்கள் இல்லாதது நிம்மதியளித்துள்ளது என்று கூறியுள்ளனர்.
மேலும் இந்த இடம் குப்பை கொட்டும் பகுதி என்பதால் அந்த பெட்டியை யாரோ இங்கு வீசி சென்றுள்ளனர் என்றும் கூறியுள்ளனர்.