ஆட்டிசம் பாதிக்கப்பட்ட பெண்; பிரசவ அறையில் உடனிருந்த நாய் - நெகிழ்ச்சி பின்னணி!

England
By Sumathi Jul 06, 2023 06:54 AM GMT
Report

பெண் ஒருவர் நாயின் உதவியுடன் குழந்தை பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டிசம்

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் அமீ டோம்கின். இவர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர். ஆட்டிசம் என்பது நரம்பியல் குறைபாடு. புல் டெர்ரியர் இனத்தைச் சேர்ந்த பெல் என்ற 2 வயது பெண் நாயை வளர்த்து வருகிறார். இவரைப் பார்த்துக் கொள்ளும் முழு வேலையையும் இந்த நாய் தான் கவனித்து வந்துள்ளது.

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட பெண்; பிரசவ அறையில் உடனிருந்த நாய் - நெகிழ்ச்சி பின்னணி! | Woman With Autism Birth Son With Help Of Her Dog

இந்நிலையில், இவர் பிரசவத்தின் போதும் பிரசவ அறைக்குள் கூடவே நாய் இருந்துள்ளது. இதுகுறித்து அமீ கூறுகையில், ``கடைகளுக்கோ, மருத்துவரைச் சந்திக்கவோகூட நான் மாதக்கணக்கில் வீட்டை விட்டு வெளியே செல்லமாட்டேன். பெல் எனக்குப் பல வழிகளில் உதவும்.

பிரசவ அறையில் நாய்

நான் அதிக பதற்றமடையும் போது, அருகில் உள்ள எக்ஸிட் வழிக்கு வழிநடத்திச் செல்லும். லிஃப்ட்டுகளில் உள்ள பட்டன்களை அழுத்தும். டெபிட் கார்டில் பணம் செலுத்த உதவும். இவள் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு பயம் இருக்கும்.

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட பெண்; பிரசவ அறையில் உடனிருந்த நாய் - நெகிழ்ச்சி பின்னணி! | Woman With Autism Birth Son With Help Of Her Dog

தன்னுடைய உரிமையாளர் வலியில் இருக்கும்போது எப்படி நடந்து கொள்வாள், பிஸியாக இருக்கும் வார்டை எப்படிச் சமாளிப்பாள் என்பதில் எல்லாம் தேர்ச்சி பெற்ற பின், பெல் பிரசவ அறையில் இருக்க மருத்துவர்களால் அனுமதிக்கப்பட்டாள். பிரசவத்திற்குப் பின் நானும் குழந்தையும் அவளோடு இருக்கத் தனியறை கொடுக்கப்பட்டது.

எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவள் இல்லாமல் இது சாத்தியமில்லை. இப்போதும் குழந்தையையும் என்னையும் கவனித்துக்கொள்ளும் வேலையைச் செய்கிறாள்'' எனத் தெரிவித்துள்ளார்.