அக்கா கணவரால் தங்கை கர்ப்பம்..பயங்கரவாதியுடன் தொடர்பு - பகீர்!
உதவிக்கு சென்ற தங்கையை, அக்காவின் கணவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
திருச்சி, தனரத்தினரம் நகரைச் சேர்ந்தவர் சையத் அலி பாத்திமா. இவரது அக்கா நிபத் என்பவரது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதனால் பாத்திமாவை உதவிக்கு அழைத்ததால் இவர் சென்றுள்ளார்.
அப்போது அவரது அக்காவின் கணவர் பாத்திமாவுக்கு தெரியாமல் அவரை ஆபாசமாக போட்டோ எடுத்துள்ளார். தொடர்ந்து, மனைவி வீட்டில் இல்லாத நேரங்களில், பாத்திமாவை மிரட்டி அழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பயங்கரவாதியுடன் தொடர்பு?
இது தொடரவே, பாத்திமா கர்ப்பமாகி ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இந்நிலையில், பாத்திமா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்து தர்ணாவில் ஈடுபட்டார். அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
எனது அக்காள் கணவருக்கு பயங்கரவாத அமைப்புகளோடு நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிகிறது. அவர் என்னையும், எங்களது மகனையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகிறார். எனக்கு பயமாக இருக்கிறது.
இதுகுறித்து, திருச்சி கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததும், அங்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், திருச்சை மாவட்ட ஆட்சியர் உருய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார் என்ற நம்பிக்கையில் வந்து இருக்கிறேன் என கை குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.