ஃபிளிப்கார்ட்டில் ஐபோன் ஆர்டர் செய்த பெண் - டெலிவரியில் காத்திருந்த அதிர்ச்சி
ஃபிளிப்கார்ட்டில் ஐபோன் ஆர்டர் செய்த பெண் டெலிவரி பாயின் செயலால் அதிர்ச்சியடைந்துள்ளார்.
ஐபோன் ஆர்டர்
பெங்களூரில் வசிக்கும் பெண் ஒருவர் Flipkart-ன் Big Billion Days விற்பனையின் போது ஆஃபரில் iPhone 15 மொபைலை ஆர்டர் செய்துள்ளார். மேலும், ஓபன் பாக்ஸ் டெலிவரி செய்து காண்பிக்க வேண்டும் என்ற ஆப்ஷனையும் தேர்ந்தெடுத்துள்ளார்.
ஆனால் டெலிவரி பாய் வந்ததும், பாக்ஸை திறக்க மறுத்து, தான் அப்படியே பாக்ஸோடு டெலிவரி செய்து விட்டு புறப்படுவதாக குறிப்பிட்ட பெண்ணிடம் கூறியுள்ளார்.
டெலிவரியில் அதிர்ச்சி
இதனை அந்த பெண்ணின் சகோதரர் முழு சம்பவத்தையும் வீடியோவில் பதிவு செய்துள்ளார். மேலும் இருவருமே ஓபன் பாக்ஸ் செய்யாமல் ஆர்டரை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மற்றொரு டெலிவரி ஏஜென்ட் ஒரு மிகச் சிறிய பேக்கேஜுடன் அவர்களது வீட்டிற்கு வந்துள்ளார்.
ஓபன் பாக்ஸ் டெலிவரியும் செய்வதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் வீடியோ எடுத்ததால் முதலில் வந்த டெலிவரி பாய் பயந்துள்ளார்.
வீடியோ ரெக்கார்ட் செய்யாமல் இருந்திருந்தால் ஒருவேளை வேறு ஏதாவது தயாரிப்பு அடங்கிய பேக்கிங்கை எங்களிடம் கொடுத்துவிட்டு சென்றிருப்பார்கள் என taau_47 என்ற யூஸர் Reddit போஸ்ட்டில் ஷேர் செய்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.