இன்ஸ்டா fake account மீது தீவிர காதல்..பெண் எடுத்த விபரீத முடிவு - பகீர் பின்னணி !
fake account மீது கொண்ட காதலால் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டா
மகாராஷ்டிரா மாநிலம் கோரேகானில் வசிக்கும் 24 வயதான இளம்பெண் ஒருவர் தனது தோழியை கேலி செய்ய மனிஷ் என்ற பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கினார். இந்த போலியான கணக்கு மூலம் தனது தோழியிடம் கிண்டலடித்து விளையாடியுள்ளார்.
நாளடைவில் இன்ஸ்டாகிராமில் தன்னுடன் பேசிய மனிஷ் மீது அப்பெண் காதல் வயப்பட்டுள்ளார். எனவே அந்த பெண் அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது அவளது தோழி 'சிவம் பாட்டீல்' என்ற மற்றொரு போலியான இன்ஸ்டா கணக்கை உருவாக்கியுள்ளார்.
விபரீத முடிவு
அதன் மூலம், நான் தான் மனிஷின் அப்பா என்று கூறி, அவள் காதலித்த மனிஷ் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டதாக அவளது தோழியிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கற்பனையான அவளது காதலன் தற்கொலை செய்துகொண்ட துக்கத்தில் இருந்த பெண் மன உளைச்சலுக்கு ஆளானார்.
இதன் காரணமாக அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த பெண்ணின் மொபைல்போனில் இந்த இன்ஸ்டாகிராம் மெசேஜ்களை பார்த்த அவரது குடும்பத்தினர் போலீசாருக்கு இது குறித்து புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, இளம்பெண்ணின் மரணத்திற்கு காரணமான அவளது தோழியை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.