bikkini உடையோடு பேருந்தில் ஏறிய பெண்; பார்த்து பதறிய மக்கள் -பரபரப்பு வீடியோ வைரல்!
கூட்டம் நிறைந்த பேருந்தில் பிகினி உடையில் ஒரு பெண் ஏறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
bikkini உடை பெண்
டெல்லி நகரத்தில் கூட்டம் நிரம்பி வழிந்த பேருந்தில் பெண் ஒருவர் வெறும் பிகினி ஆடையோடு ஏறி பயணம் மேற்கொண்டு உள்ளார். இதனை பாரத்து சகபயணிகள் மிரண்டுபோனார்கள். அவரது உடையைப் பார்த்து திகைத்து அருகில் இருந்த ஒரு பெண் பயணி அவரிடமிருந்து விலகி சென்றார்.
அதேபோல அந்தப் பெண்ணின் முன் அமர்ந்திருந்த மற்றொரு பயணியும் தனது இருக்கையை விட்டு வெளியேறினார். இந்த பெண்ணின் செயலை பேருந்தின் கதவருகே இருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மிகவும் வைரலாக பரவிய இந்த பதிவை பார்த்த பலரும் அந்த பெண்ணிற்கு கடும் கண்டனம் தெரிவித்த வருகின்றனர். இணையத்தள பக்கங்களில் ’பொதுவில் இப்படித்தான் உடை அணிய வேண்டுமா.இதுதான் பல பிரச்சினைகளுக்குக் காரணம்’ எனவும்
வீடியோ வைரல்
‘சோஷியல் மீடியாவில் கவன ஈர்ப்புக்காக இப்படிச் செய்ய வேண்டுமா? இது முட்டாள் தனம்’ என்றும் நெட்டிசன்கள் கமண்டுகளால் திட்டித் தீர்த்து வருகின்றனர். இப்படியாக இரு பகுதி இருந்தாலும் ஒரு சிலர் இந்தப் பெண்ணுக்கு ஆதரவாக பேசுகின்றனர். ‘உடை என்பது அவருடைய விருப்பம். இதில் எதிர்ப்புத் தெரிவிக்க எதுவும் இல்லை’ என்று பதிவிட்டு உள்ளனர்.
மேலும் இந்த வீடியோவை டெல்லி காவல்துறை tag செய்து, அந்த பெண் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரி தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.அடிக்கடி இம்மாதிரியான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
முன்னதாக ஒரு நபர் இரவில் நிர்வாணமாக ஸ்கூட்டரில் செல்லும் வீடியோ வைரலானதை அடுத்து தற்போது இந்த பெண்ணின் வீடியோ வெளியாகி உள்ளது.
இது போன்ற மோசமான செயல்களை செய்யும் நபர்களுக்கு சட்டப்படி தண்டனை அளிக்க வேண்டும் என்று பல தரப்பில் கோரிக்கை வைக்கப்படுகிறதது.