கண்காட்சியில் நிர்வாண நடனம் ஆட ஏற்பாடு - கடைசியில் நிகழ்ந்த சம்பவம்

andhrapradesh nudedance
By Petchi Avudaiappan Apr 17, 2022 12:15 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

ஆந்திராவில் கண்காட்சியில் நிர்வாண நடனம் ஆட ஏற்பாடு செய்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி அடுத்த உப்பங்களா என்ற கிராமத்தில் கண்காட்சி ஒன்று நடந்துள்ளது. தல்ரேவு தொகுதியில் உள்ள இந்த  கிராமத்திலுள்ள பொலேரு அம்மா மேளாவில் நிர்வாண நடனம் ஆட ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஏப்ரல் 14, 15 ஆகிய தேதிகளில் அதிகாலை 3 மணியளவில் நடந்துள்ளது.

இதுதொடர்பாக தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ர்வாண நடனம் ஆட தூண்டியதாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் விசாரணை நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.