துணி துவைக்க மறுத்த மனைவி.. அடித்து கொலை செய்த கணவர் - விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி!
துணி துவைக்க மறுப்பு மனைவியைக் கணவர் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன். இவருக்கும் கலைச்செல்வி என்ற பெண்ணுக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.கூலிதொழியாக வேலை செய்து வரும் அன்பழகனுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த ரூபினி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தனியாக வசித்து வந்த ரூபினியை மிரட்டிப் பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.இதனை அறிந்த உறவினர்கள் ரூபினியை அன்பழகனுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனையடுத்து ரூபினியை வீட்டு வேலை செய்யும்படி அன்பழகன் உறவினர்கள் உடம்பில் சூடு வைத்தும், அடித்து கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
அடித்து கொலை
இந்த நிலையில் மீண்டும் வீட்டு வேலை செய்யும்படி அன்பழகன் கூறியதாகத் தெரிகிறது. இதற்கு ரூபினி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அன்பழகன் ரூபினியை இரும்பு கம்பியால் அடித்து கொலைச் செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளார்.
இதனைகண்ட அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ரூபினியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம், தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.