3 குழந்தைகளுக்கு தாய்; கணவனும் வேணும், காதலனும் வேணும் - மின்கம்பத்தில் ஏறி அடம்பிடித்த பெண்!

Viral Video Uttar Pradesh
By Sumathi Apr 05, 2024 05:23 AM GMT
Report

 பெண் ஒருவர் தனக்கு காதலனும் வேண்டும், கணவனும் வேண்டும் என்று கோரி, மின் கம்பத்தில் ஏறி போராட்டம் நடத்தினார்.

காதலுக்கு மறுப்பு

உத்தரப் பிரதேசம், கோராக்பூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 34 வயது பெண். இவருக்கு திருமணமாகி கணவன் மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

uttar pradesh

இந்நிலையில், பக்கத்து ஊரில் வசிக்கும் ஒருவரை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வருகிறார். சமீபத்தில் அவரது கணவர் ராம் கோவிந்திற்கு இருவரின் தொடர்பு தெரியவந்தது. உடனே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஏர்கூலரில்தான் தூங்குவேன்..அடம்பிடித்த நபர் - செருப்பால் பின்னி எடுத்த பெண்!

ஏர்கூலரில்தான் தூங்குவேன்..அடம்பிடித்த நபர் - செருப்பால் பின்னி எடுத்த பெண்!

அடம்பிடித்த மனைவி

வீட்டில் ஏற்கெனவே நிதிப் பிரச்னை இருப்பதால் காதலனும் நம்மோடு சேர்ந்து இருந்தால், நிதிப் பிரச்னை தீரும் என்று மனைவி கணவனிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை வீட்டைவிட்டு விரட்டியுள்ளார்.

இதையடுத்து தன்னை கணவன் மற்றும் காதலனுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கவேண்டும் என்று கோரி, அப்பெண் அங்கிருந்த மின் கம்பத்தில் ஏறி போராட்டம் நடத்தினார்.

மேலும், தனது கணவர் தனது காதலனும் ஒரே வீட்டில் தங்க அனுமதிக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால், அங்கு ஏராளமானோர் திரண்டதில் சம்பவ இடம் விரைந்த போலீஸார் பெண்ணை மீட்டு கவுன்சிலிங் கொடுத்து வருகின்றனர்.