ஏர்கூலரில்தான் தூங்குவேன்..அடம்பிடித்த நபர் - செருப்பால் பின்னி எடுத்த பெண்!

Viral Video India
By Sumathi Oct 20, 2022 10:04 AM GMT
Report

மருத்துவமனையில் ஏர்கூலரில் தூங்கிய நபரை, பெண் ஒருவர் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

மருத்துவமனை

சத்தீஸ்கர், அம்பிகாபூர் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு திடீரென நபர் ஒருவர் உள்ளே நுழைந்து நோயாளிகள் இருக்கும் வார்டின் தரையில் படுக்கை விரித்து போட்டுள்ளார். பின்னர் அங்கிருந்த ஏர்கூலரை ஆன் செய்து விட்டு படுத்து தூங்கத் தொடங்கியுள்ளார்.

ஏர்கூலரில்தான் தூங்குவேன்..அடம்பிடித்த நபர் - செருப்பால் பின்னி எடுத்த பெண்! | Man Turns On Air Cooler Hospital Video Chattishgar

மருத்துவமனையில் நோயாளிகள் பலர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கூலரின் குளிர் தாங்க முடியாமல் தவித்துள்ளனர். தொடர்ந்து அங்கிருந்த பெண் ஒருவர் கூலரை நிறுத்த வேண்டும் என அந்த நபரிடம் கேட்டுள்ளார்.

ஏர்கூலரில் தூக்கம்

ஆனால் அதனை மதிக்காமல் அந்த நபர் தூக்கத்தை தொடர்ந்துள்ளார். உடனே அந்த பெண் தானே கூலரை நிறுத்தியுள்ளார். இதனால் எரிச்சலடைந்த அந்த நபர் எழுந்து மறுபடியும் கூலரை ஆன் செய்துவிட்டு படுத்து தூங்கியுள்ளார்.

அதனையடுத்து அந்தப் பெண் அவரை எழுப்பி திட்டியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்தப் பெண் தனது செருப்ப எடுத்து அடித்தும், காலால் எட்டி உதைத்தும் உள்ளார். ஆனால் அந்த நபர் அது எதற்கும் தடுக்காமல், அப்படியே தரையில் அமர்ந்துள்ளார்.

வீடியோ வைரல்

இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து, அந்தப் பெண், போலீஸில் புகாரளித்துள்ளார். உடனே விசாரித்ததில் அந்த நபர் கூலரில் தூங்கதான் மருத்துவமனை வந்தது தெரியவந்தது.

உடனே அந்த நபர் அப்புறப்படுத்தப்பட்டு, மருத்துவமனையில் தேவையற்ற நபர்கள் நுழைவதை கண்காணிப்பதாக உறுதியள்ளத்துள்ளனர்.