ஆர்டர் செய்த உணவை பெற விமான பயணம் செய்யும் பெண் - ஏன்? அதில் அப்படி என்ன இருக்கு!

United States of America
By Sumathi Aug 08, 2023 10:07 AM GMT
Report

பெண் ஒருவர் ஆர்டர் செய்த உணவை பெற விமான பயணம் மேற்கொள்கிறார்.

வசதி இல்லை

அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் உள்ள போர்ட் ஆல்ஸ்வொர்த் என்ற இடத்தைச் சேர்ந்தவர் சலினா ஆல்ஸ்வொர்த்(25). இந்த பகுதியில் மொத்தமாகவே 186 பேர் தான் இருக்கின்றனர். சுற்றுலா சீசன் வந்தால் மட்டுமே மக்கள் தொகை 400ஐ தாண்டுகிறது.

ஆர்டர் செய்த உணவை பெற விமான பயணம் செய்யும் பெண் - ஏன்? அதில் அப்படி என்ன இருக்கு! | Woman Travels On Flight To Get Online Deliveries

இதற்கு காரணம், அங்கு சாலை வசதிகள் சரியாக இல்லை. பல்பொருள் அங்காடிகள், ரெஸ்டாரண்ட்கள் மற்றும் மருத்துவமனைகள் என எதுவும் இல்லை. இதனால், எந்த ஒரு பொருளையும் ஆர்டர் செய்து, பாதி தூரம் சென்று தான் வாங்கும் நிலை உள்ளது.

விமான பயணம்

எனவே, ஆர்டர் செய்யும் உணவு பார்சல்களை, மற்ற சில பார்சல்களை பெற விமானம் மூலம் 200 மைல்கள் பயணிக்கிறார். இப்படிப்பட்ட இடத்தில் ஏன் இருக்க வேண்டும்? அவ்வளவு முக்கியமா என கேட்டால், ஆம்..

ஆர்டர் செய்த உணவை பெற விமான பயணம் செய்யும் பெண் - ஏன்? அதில் அப்படி என்ன இருக்கு! | Woman Travels On Flight To Get Online Deliveries

1940ல் சலினாவின் குடும்பத்தினர் இந்த பகுதிக்கு வந்து சமூகத்தை உருவாக்கியுள்ளனர். 5 தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். அங்கு ஒரு விடுதியையும் நடத்தி வந்தனர்.

சுற்றுலாவுக்காக இங்கு ஒருமுறை வந்த ஜாரெட் ரிச்சர்ட் என்பவர் சலினாவை காதலித்து மணந்தார். தற்போது இருவரும் இணைந்து இந்த ஓட்டலை நிர்வகித்து வருகின்றனர்.