தாயை மரத்தில் கட்டிவைத்து எரித்துக்கொன்ற மகன்கள் - கொடூர சம்பவம்!
Attempted Murder
Crime
By Sumathi
தாயை மகன்களே மரத்தில் கட்டிவைத்து எரித்துக்கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
குடும்ப பிரச்சினை
திரிபுரா, கம்பரி பகுதியைச் சேர்ந்தவர் 62 வயது பெண். இவரது கணவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்ததால், தனது 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தாயுக்கும், 2 மகன்களுக்கும் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 2 மகன்களும் பெற்ற தாயை வீட்டின் அருகே உள்ள மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.
மகன்கள் கொடூரம்
தொடர்ந்து, உயிரோடு தீ வைத்து எரித்துக் கொன்றுள்ளனர். உடனே சம்பவம் குறித்து அறிந்த போலீஸார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது தப்பியோடிய 2 மகன்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.