கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த சம்பவம் : குற்றவாளியை தட்டி தூக்கிய காவல்துறை
Kerala
By Irumporai
2 years ago
கேரளாவில் ரயிலுக்கு தீ வைத்த நபர் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.
ரயிலில் தீவைப்பு
ஆலப்புழா - கண்ணூர் விரைவு ரயிலில் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு சென்றுக்கொண்டிருந்தது. இரவு 9.37 மணிக்கு D1 கோச்சில் பயணம் செய்த பெண் உட்பட பயணிகள் மீது இரண்டு பாட்டில் பெட்ரோல் ஊற்றி மர்மநபர் ஒருவர் தீ பற்ற வைத்துள்ளார்.
தீ வைத்த நபர் கைது
இதனை பார்த்த ரயில் பயணிகள், அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய நேரத்தில், ரயிலில் இருந்து அந்த நபர் வெளியே குதித்து தப்பி ஓடியதாக பயணிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ரயிலுக்கு தீ வைத்த நபர் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.கேரள புலனாய்வுக் குழு நொய்டா சென்றிருந்த நிலையில் ஷாருக் சைபி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.