52 வயது பெண்ணை உயிருடன் விழுங்கிய மலைப்பாம்பு - வயிற்றை கிழித்து உடல் மீட்பு!

Snake Indonesia Death
By Sumathi Oct 27, 2022 07:36 AM GMT
Report

 52 வயது பெண்ணை 22 அடி மலைப்பாம்பு விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் மாயம்

இந்தோனேசியா, ஜம்பி என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஜாஹ்ரா(52). இவர் ரப்பர் மரம் வெட்டும் தொழிலாளி. இந்நிலையில், வழக்கம்போல் அன்றாட வேலைக்கு சென்ற ஜாஹ்ரா வீடு திரும்பவில்லை. இதனால் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் காட்டுப்பகுதியில் தேடி பார்த்தும் கிடைக்காததால் போலீசாரிடமும் புகார் தந்துள்ளனர்.

52 வயது பெண்ணை உயிருடன் விழுங்கிய மலைப்பாம்பு - வயிற்றை கிழித்து உடல் மீட்பு! | Woman Swallowed By Big Python In Indonesia

தொடர்ந்து, மறுநாளும் அருகே உள்ள காட்டுப்பகுதியில் தேடி உள்ளனர். அப்போது 22 அடி ராட்சத மலைப்பாம்பு பெரிய வயிற்றுடன் தென்பட்டுள்ளது. அவர்களுக்கு சந்தேகம் வரேவ அந்த பகுதியை சுற்றி தேடியுள்ளனர்.

விழுங்கிய மலைப்பாம்பு

அங்கு ஜாஹ்ராவின் உடைகள் மற்றும் உடமைகள் சிதறி கிடந்துள்ளது. மேலும், பாம்புதான் பெண்ணை விழுங்கியிருக்குமோ என சந்தேகித்து, கிராமத்தினர் சேர்ந்து அந்த பாம்பை கொன்று வயிற்றை கிழித்து பார்த்துள்ளனர்.

அதில் பெண்ணை அந்த ராட்ச பாம்பு விழுங்கியது உறுதியாகியுள்ளது. வயிற்றில் இருந்து பெண்ணின் உடலை மீட்டு எடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.