உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் முத்த காய்ச்சல் பற்றி தெரியுமா? பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
முத்தம் கொடுத்ததால் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் முத்த நோய் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
முத்த காய்ச்சல்
பிரிட்டனைச் சேர்ந்த நெவி மெக்ரெவி(23) என்ற பெண் ஒருவர் பட்டப்படிப்பை முடித்து டிகிரி வாங்கியதைக் கொண்டாட தனது தோழிகளுடன் பார் ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கு வந்த ஒரு நபரை அந்த பெண் தற்செயலாக சந்தித்துள்ளார். அப்போது யாரென்று அறியாத நபருக்கு நெவி வாயோடு வாய் முத்தம் கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில்,அடுத்த நாள் அவருக்கு உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. எனவே அவரை உடனே அருகில் உலா மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை GLANDULAR FEVER எனப்படும் சுரப்பிக் காய்ச்சல் தாக்கியுள்ளதாக தெரிவித்தனர்.
நேர்ந்த சோகம்
உடலின் சுரப்பிகள் வீங்கி அதீத வேர்வை ஏற்பட்டு தொடர்சியாக வாந்தி எடுத்து தற்போது நடக்கக்கூட முடியாத நிலையில் நெவி மருத்வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வகை சுரப்பி நோயானது எப்ஸ்டைன் பார் (Epstein barr virus -EPV)என்ற வைரசால் ஏற்படுவது ஆகும்.
இந்த வைரஸ் எச்சில் மூலம் பரவக்கூடிய தன்மை உடையது. முக்கியமாக ஒருவரது எச்சில் மற்றவருக்கு மிகவும் தொடர்புபடும் முத்தத்தால் இந்த நோய் அதிகமாக பரவுவதால் இதை முத்தக் காய்ச்சல் (Kissing fever)என்று அழைக்கின்றனர். இது இளம் வயதினரிடமே அதிகமாக பரவி வருகிறது.
இது பெரும்பாலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இல்லாத நேரத்தில் இந்த நோய் ஏற்படுகிறது. மேலும், இந்த நோயினால் ஹெப்பாடிட்டிஸ், கல்லீரல் செயலிழல்ப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
