அடுத்து புதிய வைரஸால் ஆட்டம் காணும் நாடு - இந்திய மருத்துவ மையம் அதிர்ச்சி தகவல்

Cold Fever India Virus
By Sumathi Mar 06, 2023 04:18 AM GMT
Report

'எச்.3 என்-2' என்ற வைரஸ் வேகமாக பரவி வருவதாக இந்திய மருத்துவ ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

புதிய வைரஸ் 

நாடு முழுவதும் 'எச்.3 என்-2' வைரசால் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இந்த வைரஸ் காய்ச்சல் வந்தால் இருமல், தொண்டை வலி, உடல் வலியும் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

அடுத்து புதிய வைரஸால் ஆட்டம் காணும் நாடு - இந்திய மருத்துவ மையம் அதிர்ச்சி தகவல் | New Viral Fever Spreading Across The Country India

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதித்த ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக செல்கிறார்கள். இதனால் அங்கு கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்நிலையில், "சமீபத்தில் நாடு முழுவதும் பலரை பாதித்துள்ள தொடர் இருமல் மற்றும் குளிர் காய்ச்சலுக்கு, A H3n2 வைரஸ்தான் காரணம் இது உயிருக்கு ஆபத்தானது இல்லை எனவும்

பரவும் காய்ச்சல்

சாதாரண பாரசிட்டமால் மாத்திரையே இதற்கு போதுமானது என்றும் அதிக நீர் அருந்துவது, முகக்கவசம் அணிவதன் மூலம் இதை தடுக்கலாம் என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தகவல் எச்சரித்துள்ளது.

இதற்கிடையில், காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.