என் அனுமதி இல்லாமல் என்னை ஏன் பெத்தீங்க? பெற்றோர் மீது வழக்கு தொடர்ந்த மகள்!
அனுமதியின்றி தன்னை பெற்றெடுத்த பெற்றோர்கள் மீது மகள் வழக்கு தொடர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏன் பெத்தீங்க?
அமெரிக்கா மாகாணம் நியூஜெர்சியில் வசிப்பவர் தியாஸ் என்ற பெண். இவர், தன் அனுமதியின்றி தன்னைப் பெற்றெடுத்ததற்காக அவரது பெற்றோர் மீது வழக்குத் தொடுத்திருக்கிறார். இந்த விஷயம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான ஒரு வீடியோவில் பேசிய தியாஸ், ``நான் உண்மையில் இங்கு இருக்க விரும்புகிறேனா என்று நான் பிறப்பதற்கு முன்பு என் பெற்றோர் எப்படியும் என்னை தொடர்புகொண்டு கேட்டிருக்க வேண்டும். அதற்காக முயற்சித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் முயற்சிக்கவில்லை.
பெற்றோர் வழக்கு
எனது விருப்பத்திற்கு எதிராக என்னை பெற்ற பெற்றோருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருக்கிறேன். என்னுடைய குழந்தைகளை நான் கருத்தரித்து பெற்றெடுக்கவில்லை. அவர்களை நான் தத்தெடுத்திருக்கிறேன். அவர்கள் இங்கே இருப்பது என் தவறல்ல. ஒரு நல்ல மனிதனாக இருக்கவும் அவர்களுக்கு உதவவும் முயற்சிக்கிறேன்.
நீங்கள் இப்போது கர்ப்பமாக இருந்தால், ஒரு மனநல மருத்துவரை சந்தித்து, அந்த குழந்தைகள் உண்மையில் இங்கே பிறக்க விரும்புகிறார்களா என்று கேட்க வேண்டும். என்னிடம் அப்படி கேட்காததால் என் பெற்றோர் மீது நான் வழக்கு தொடர்ந்தேன்.என்னை கருத்தரிக்க பங்களித்து, என்னைப் பெற்றெடுத்த என் அம்மாவால்தான் நான் இங்கே இருக்கிறேன்.
குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோருக்கு எதிராக வழக்குத் தொடர கற்றுக்கொடுப்பதை எனது வாழ்க்கைப் பணியாக செய்கிறேன். எனவே, விருப்பமில்லாத இடத்தில் வேலை செய்து சம்பாதிக்க வேண்டிய அவசியம் இனி குழந்தைகளுக்கு இருக்காது." இவ்வாறு பேசியுளார். இதனால் அவர் இணையத்தளத்தில் மிகவும் பிரபாலாகினர். மேலும் அவர் பதிவிட்ட அந்த வீடியோவிற்கு கீழ் நெட்டிசன்கள் பலர் காரசாரமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.