காதலன் மேல் கொலைவேறி தாக்குதல் - பெண்ணை தூக்கிச் சென்ற கும்பல்.... - சிசிடிவி வீடியோ...!

Tamil nadu Viral Video Tamil Nadu Police
By Nandhini Jan 27, 2023 12:55 PM GMT
Report

தென்காசியில் காதலனை அடித்து பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற கும்பலின் சிசிடிவி வீடியோ வெளியாகி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் செய்த காதலர்கள்

தென்காசி மாவட்டம், இலஞ்சி, கொட்டாகுளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் வினித்தும், அதே பகுதியை சேர்ந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த நவீன் பட்டேல் என்பவருடைய மகள் கிருத்திகாவும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர்.

இதனையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 27ம் தேதி நாகர்கோவில் நீதிமன்றத்தில் சட்டபூர்வமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்த நிலையில் பாதுகாப்பு கேட்டு குற்றால காவல்துறையிடம் மனு அளித்துள்ளனர். இதன் பின்பு, ஒரு மாதமாக இருவரும் இணைந்து இல்லற வாழ்க்கை நடத்தி வந்தனர்.

wed-woman-kidnapped-her-parents-tenkasi

பெண்ணை தூக்கிச் சென்ற கும்பல்

இந்நிலையில், நேற்று மதியம் உறவினர் வீட்டில் வினித், தன் மனைவி கிருத்திகா மற்றும் பெற்றோருடன் இருந்தார். அங்கு அடியாட்களுடன் வந்த பெண் வீட்டார் வினித் மற்றும் அவரது பெற்றோரை சராமரியாக அடித்து உதைத்தனர்.

மேலும், வாசலில் நின்றிருந்த கார்களை உடைத்து சேதப்படுத்தினர். கிருத்திகாவின் சம்மதமின்றி அவரையும் அடித்து, வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்றுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, இது தொடர்பான சிசிடிவி வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.