கட்டாயப்படுத்தி உடலுறவு.. காதலன் கழுத்தை நெரித்துக் கொலை.. காதலி பகீர் வாக்குமூலம்!
உடலுறவின் போது காதலன் கழுத்தை நெரித்து பெண் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் இக்பால்(32). அதே பகுதியில் 32 வயதான பெண் திருமணமாகி பிள்ளைகள் மற்றும் கணவருடன் வசித்து வருகிறார்.இந்த நிலையில் இக்பாலுக்கும் அந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு போனில் பேசி வந்துள்ளனர்.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையிலிருந்து வந்துள்ளனர்.இந்த நிலையில் இக்பால் அவரது வீட்டிற்கு அருகில் சடலமாகக் கிடந்தார். இதனையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது சந்தேகத்த்றிகு இடமான வகையில் அந்த பெண்ணை அழைத்து விசாரித்தனர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. இக்பால் தன்னை வற்புறுத்தி கட்டாய உறவு வைத்துக் கொண்டதாகக் கூறினார்.
கொலை
இது குறித்து தனது கணவரிடம் சொல்ல முயன்ற போது உறவு வைத்துக்கொண்டபோது வீடியோ எடுத்திருப்பதாகவும், அதனைக் கணவரிடம் காட்டப்போவதாக மிரட்டினார்.இந்த வீடியோவை வைத்துக் கொண்டு இக்பால் உறவு வைத்துக் கொண்டதாகக் கூறியவர், அவரை கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறினார்.
இதனையடுத்து இருவரும் உறவு வைத்துக்கொண்டபோது அவரது நெஞ்சில் அமர்ந்து கையால் பொத்திக்கொண்டு அவரது கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை வீட்டின் அருகில் வீசியதாக பகீர் வாக்குமூலம் அளித்தார். இதனைத் தொடர்ந்து அப்பெண்ணைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.