மிளகாய் பொடி தூவி..கள்ளகாதலன் அரங்கேற்றிய கொடூரம்- அலறி துடித்த குழந்தைகள்!
3 குழந்தைகளைக் கொடூரமாகத் தாக்கி காயத்தின் மீது மிளகாய்ப் பொடி தூவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம்
ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டத்தில் வசித்து வருபவர் சசி. இவருக்குத் திருமணமாகி உதயகுமார், ராகுல் மற்றும் ரேணுகா என்ற 3 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாகக் கணவரைப் பிரிந்து வசித்து வருகிறார். இதனையடுத்து அதே ஊரைச் சேர்ந்த பவன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.
அதன் பிறகு சசி தனது 3 குழந்தைகளுடன் பவனுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த சூழலில் சசியின் குழந்தைகளான உதயகுமார், ராகுல் மற்றும் ரேணுகாவை பவன் அவ்வப்போது அடித்துத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று செல்போன் சார்ஜர் வயரை பயன்படுத்தி 3 குழந்தைகளைப் பவன் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
மிளகாய் பொடி
குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு, ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அப்போது குழந்தைகளின் உடம்பில் காயம் இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
முதல்கட்ட விசாரணையில் கடந்த சில நாட்களாக, பவன் தங்களைக் கடுமையாகத் தாக்கியும், அந்த காயத்தின் மீது மிளகாய் பொடியைத் தூவியும் வந்ததாகக் குழந்தைகள் வேதனையுடன் தெரிவித்தனர்.