அழுகிய நிலையில் மகன் சடலம்; கூடவே இருந்த தாய் - பகீர் சம்பவம்!
அழுகிய நிலையில் இருந்த மகனின் உடலுடன் தாய் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகன் இறப்பு
சென்னை, ஜி.எஸ்.டி. சாலையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் 7வது மாடியில் உமா (50), அவரது மகன் விஷ்ணு (23) ஆகிய இருவரும் வசித்து வந்துள்ளனர்.
உமாவின் கணவர் பாலகிருஷ்ணன் பூட்டானில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், 7வது மாடியில் துர்நாற்றம் வீசுவதாக குடியிருப்பு வாசிகள் புகார் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில், காவலாளி முத்துராமன் சென்று பார்த்துள்ளார்.
தாயின் நிலை
அப்போது 7வது மாடியில் இருக்கும் அனைத்து வீடுகளும் பூட்டியிருந்த நிலையில், ஒரு வீடு மட்டும் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்துள்ளது. உடனே இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்,
கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஒரு அறையில் விஷ்ணு என்பவர் உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். மற்றொரு அறையில் அவரது தாய் இருந்துள்ளார். உமா சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து உடலை மீட்டு உமா காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விஷ்ணுவின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.