பிரபல நடிகை மர்ம மரணம்; வீட்டில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல் - நடந்தது என்ன?
நடிகை நூர் மாளபிகா தாஸ் அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
நடிகை மரணம்
அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர் நூர் மாளபிகா தாஸ். இவர் விமான பணிப்பெண்ணாக பணியாற்றியுள்ளார். பிறகு இந்தி வெப்தொடர்கள் மூலம் நடிகையாக பிரபலமானார். இவர், சிஸ்கியான், சரம்சுக் உள்ளிட்ட பல வெப்தொடர்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இவர் மும்பை லோகந்தவாலா பகுதியில் ஒரு வீடு எடுத்து தங்கி நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில், நூர் மாளபிகா தன் வீட்டில் இருக்கும் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்தது. அவரது வீட்டில் இருந்து ஏதோ துர்நாற்றம் வருவதாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட உடல்
இதனை அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் தூக்கிகல் அழுகிய நிலையில் பிணமாக இருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நூர் மாளபிகாவின் உடலை வாங்க அவரின் உறவினர் யாரும் முன்வரவில்லை. இதனையடுத்து, போலீசாரும், என்ஜிஓவும் சேர்ந்து நூரின் இறுதிச்சடங்கை செய்துள்ளனர். 37 வயதான நூர் தற்கொலை செய்து கொண்டது குறித்து அறிந்த சக நடிகர்கள், நடிகைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.