நண்பனின் மனைவியுடன் தகாத உறவு - நடுரோட்டில் காதலன் வெறிச்செயல்!
தகாத உறவில், பெண்ணை கள்ளக்காதலன் நடுரோட்டில் கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
தகாத உறவு
வேலூர், காட்பாடியைச் சேர்ந்தவர் திலகா(28). இவர் காந்தி நகரில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ராஜேஷ் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார்.
ராஜேஷின் நண்பன் சந்தோஷ் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்துச் சென்றுள்ளார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நண்பரின் மனைவிக்கும் சந்தோஷுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கணவர் ராஜேஷ் மனைவியை கண்டித்துள்ளார்.
பகீர் சம்பவம்
அதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன் திலகா, சந்தோஷை இனிமேல் இந்த பக்கம் வர வேண்டாம் உன் வாழ்க்கையை பார்த்துக் கொள் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ், திலகா மாலை பணி முடிந்து வீடு திரும்பியபோது அவரை வழிமறித்து மறைத்து வைத்திருந்த கத்தியால் நடு தலையிலையும், வலது புறம் காதின் மேல் உள்ள தலைப்பகுதியிலும், வெட்டி உள்ளார்.
இதில் திலகா ரத்த வெள்ளத்தில் சரிந்தார். தொடர்ந்து தப்ப முயன்ற சந்தோஷை பொதுமக்கள் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்துள்ளனர். உடனே உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.