18 வருஷம்.. பக்கவாதத்தால் நோயாளி அவதி - AI உதவியால் பேசும் அதிசயம்!

United States of America
By Sumathi Aug 26, 2023 07:11 AM GMT
Report

 AI தொழில்நுட்ப உதவியால் ஆச்சர்ய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

பக்கவாதம்

ஆன்(47) அன்ற பெண் 18 ஆண்டுகளுக்கு முன்பு மூளை தண்டுவட பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரால் பேசவோ அல்லது டைப் செய்யவோ முடியாத நிலை நீடித்துள்ளது.

18 வருஷம்.. பக்கவாதத்தால் நோயாளி அவதி - AI உதவியால் பேசும் அதிசயம்! | Woman Speaks Via Brain Implant After Stroke

இந்நிலையில், இதனை ஆராய்ந்த ஆராய்ச்சிக்குழு அவரின் மூளையின் மேற்பரப்பில், 253 மெல்லிய காகித மின்முனைகளைப் பொருத்தியது. இதன் மூலம் இவரின் தனித்துவமான பேச்சு ஒலிகளின் வடிவங்களை, மூளை சமிக்ஞைகளாக வெளிப்படுத்தும்.

AI  உதவி

தொடர்ந்து, இதனை அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் AI அல்காரிதம் தொழில் நுட்பத்திற்கு, உரிய பயிற்சி தரப்பட்டுள்ளது. அதன்படி, இவரின் தனித்துவமான 39 ஒலிகள், சமிஞ்சைகளை சாட் ஜிபிடி பாணியில் கம்ப்யூட்டரானது மொழி வாக்கியமாக மாற்றும்.

18 வருஷம்.. பக்கவாதத்தால் நோயாளி அவதி - AI உதவியால் பேசும் அதிசயம்! | Woman Speaks Via Brain Implant After Stroke

முகபாவனை மற்றும் பேச்சை எழுத்து வடிவில் மாற்றும் போது, 28 சதவிகித வார்த்தைகள், டீகோடிங் எரர் ஆகலாம். மற்றவர்களுடன் கருத்தை வெளிப்படுத்த மிகவும் இயற்கையான வழியை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள்.

நோயாளிகளுக்கு இது உண்மையான தீர்வாக மாற்றும் பணியில் எங்களை மிகவும் நெருக்கமாகக் கொண்டு வருகிறது என கலிஃபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் எட்வர்ட் சாங் தெரிவித்துள்ளார்.