பறக்கும் விமான கழிவறையில் சிகரெட் பிடித்த இளம்பெண் - பரபரப்பு!
விமான கழிவறையில் சிகரெட் பிடித்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான கழிவறை
கொல்கத்தா நகரில் இருந்து பெங்களுரு நோக்கி 6இ 716 என்ற எண் கொண்ட இண்டிகோ விமானம் ஒன்று வந்துள்ளது. விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த நிலையில், பெண் பயணி பிரியங்கா என்பவர் கழிவறைக்கு சென்றுள்ளார்.

அங்கு சிகரெட்டை பற்றவைத்து புகைப்பிடித்து ஒழுங்காக அணைக்காமல் தரையில் போட்டுவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் சிகரெட் புகை வாசம் வந்ததையடுத்து விமானப் பணிப்பெண் கழிவறைக்குள் சென்று பார்த்துள்ளார்.
பரபரப்பு
அப்போது அதிர்ச்சி அடைந்த பணிப்பெண், அதை அனைத்துள்ளார். தொடர்ந்து இதுகுறித்து புகாரளித்துள்ளார். விமானம் தரையிறங்கிய நிலையில், விமான நிலைய காவல்துறையினர் இளம்பெண்ணை கைது செய்தனர்.
சக பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.