கோவிலுக்குள் மது அருந்திய பெண் - ஆத்திரத்தில் சுட்டுக்கொன்ற நபர்!
மது அருந்திய பெண் சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
மது அருந்திய பெண்
பஞ்சாப், அர்பன் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் பர்மீந்தர் கவுர்(32). இவர் அருகே உள்ள துக்நிர்வான் சஹிப் குருத்வாரா என்ற அவர்கள் மத வழிபாட்டு தலத்திற்கு அடிக்கடி செல்வது வழக்கம்.
இந்நிலையில், இந்தப் பெண் குருத்வாரா வளாகத்தில் உள்ள சரோவர் எனப்படும் புனிதநீர் இருக்கும் பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். இதனை பார்த்த நபர் ஒருவர் கண்டித்துள்ளார்.
சுட்டுக் கொலை
ஆனால் போதையில் இருந்த அந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில், நிர்வாகிகள் அங்கு வந்து பெண்ணை மேனேஜர் அறைக்கு விசாரிக்க அழைத்து சென்றுள்ளனர். இதில் திடீரென நிர்மல்ஜித் சிங் சைனி என்ற நபர் தனது துப்பாக்கியால் பெண்ணை சுடத் தொடங்கினார்.
இதில் 3 குண்டுகள் பெண்ணின் மீது பாய்ந்துள்ளது. இதில் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துப்பாக்கிச்சூட்டில் மற்றொரு பக்தர் மீதும் குண்டு பாய்ந்த நிலையில், அவர் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சுட்ட நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.