நடுரோட்டில் பிரபல நடிகை சுட்டுக்கொலை - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
நடிகை வழிப்பறி கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ரியா குமாரி
ஜார்க்கண்டை சேர்ந்தவர் நடிகை ரியா குமாரி. இவரது கணவர் பிரகாஷ் குமார். இவர் படத்தயாரிப்பாளர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர்கள் காரில் கொல்கத்தாவுக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது காரை 3 மர்ம நபர்கள் மறித்துள்ளனர். தொடர்ந்து பிரகாஷ் குமாரை கொள்ளையர்கள் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், அவரது கணவரை ரியா குமாரி மீட்க முயற்சித்தார். அதில், ரியா குமாரியை கொள்ளை கும்பல் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றனர்.
சுட்டுக்கொலை
பின்பு, ரத்த வெள்ளத்தில் கிடந்த ரியா குமாரியை அவரது கணவர் காரில் கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அதனையடுத்து, புகாரின் பேரில் போலீஸார் யா குமாரியின் கணவர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தி, தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.