தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; குருவிகளைப் போல மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் - விசாரணை ஆணையம்..!

Thoothukudi Crime
By Thahir Aug 18, 2022 01:15 PM GMT
Report

2018ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பான விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.ஆணையம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திடுக்கிடும் தகவல்கள் 

1. எவ்வித ஆத்திரமூட்டலும் இல்லாத நிலையிலும் போராட்டக்காரர்களை, போலீசார் மறைந்து இருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர்; கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது.

2. கலைந்து ஓடியவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது; எந்த ஒரு போலீசாருக்கும் படுகாயம் ஏற்படவில்லை.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; குருவிகளைப் போல மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் - விசாரணை ஆணையம்..! | Tuticorin Firing Shocking Information

3. போலீசாரின் துப்பாக்கிச்சூடு சம்பவம் கொடூரமான செயல் என ஆணையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது; காவல்துறை தலைமையின் அப்பட்டமான தோல்வி என குறிப்பிடப்பட்டுள்ளது.

4. துப்பாக்கி குண்டு எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமலேயே போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர்.

5. ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த போராட்டக்காரர்களை, பூங்காவில் ஒளிந்துகொண்டு போலீசார் சுட்டுள்ளனர்.

6. அப்போதைய ஆட்சியர் வெங்கடேசன் தனது பொறுப்புகளை தட்டிகழித்துவிட்டு கோவில்பட்டியில் இருந்துள்ளார்; எவ்வித யோசனையும் இல்லாமல் முடிவுகளை எடுத்துள்ளார்.

7. தொலைவில் இருந்து சுடக்கூடிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, உடற்கூராய்வு சோதனையில் உறுதியாகியுள்ளது.

8. போலீசார் தங்களது வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளனர்.

9. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் போலீஸ்காரர் சுடலைக்கண்ணு மட்டும் 17 ரவுண்ட் சுட்டுள்ளார்; ஒரே போலீசாரை 4 இடங்களில் வைத்து சுட வைத்ததன் மூலம், அவரை அடியாள் போல காவல்துறை பயன்படுத்தியுள்ளது.

10. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை தொடக்கம் முதலே மிக அலட்சியமாக அணுகியுள்ளார் மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன்.

11. வீட்டில் இருந்துகொண்டே சமாதான கூட்டத்திற்கு தலைமை தாங்க உதவி ஆட்சியரை அனுப்பியுள்ளார்.

12. துணை தாசில்தார்கள் சேகர், சந்திரன், கலால் அலுவலர் கண்ணன் ஆகியோரிடம் போலீசார் விருப்பம்போல உத்தரவு பெற்றுள்ளனர்.

13. விசாரணை ஆணையம் துணை தாசில்தார்கள் மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை.

14. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் குருவிகளைப் போல மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

15. அப்போதைய தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.