மனைவியை உயிரோடு தீ வைத்து கொளுத்திய கணவன் - அதிர்ச்சி பின்னணி

Attempted Murder Cuddalore Crime
By Sumathi Apr 29, 2025 04:34 AM GMT
Report

கணவன் தனது மனைவியை தீ வைத்து கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப விவகாரம்

கடலூர், மேலபழஞ்சநல்லூரை சேர்ந்தவர் விக்னேஷ்(25). இவர் ஆயில் மில் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் சினேகா(24) என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது.

மனைவியை உயிரோடு தீ வைத்து கொளுத்திய கணவன் - அதிர்ச்சி பின்னணி | Woman Set On Fire By Husband Cuddalore

இந்நிலையில், இருவருக்குமிடையே குடும்ப விவகாரம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருகட்டத்தில் ஆத்திரத்தில் விக்னேஷ் தன் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துகொளுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

நாட்டை உலுக்கிய கண்ணகி முருகேசன் ஆணவக்கொலை - உச்சநீதிமன்ற தீர்ப்பு

நாட்டை உலுக்கிய கண்ணகி முருகேசன் ஆணவக்கொலை - உச்சநீதிமன்ற தீர்ப்பு

கணவன் வெறிச்செயல்

இதில் அலறி துடித்த சினேகாவை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அருகில் நின்ற விக்னேஷுக்கும் தீக்காயம் ஏற்பட்டதால், அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மனைவியை உயிரோடு தீ வைத்து கொளுத்திய கணவன் - அதிர்ச்சி பின்னணி | Woman Set On Fire By Husband Cuddalore

உடனே இதுகுறித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், சினேகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருமணமாகி கடந்த 10 மாதங்களே ஆன நிலையில், கனவன் மனைவியை தீ வைத்து கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.