பாஸ்தாவில் பாட்டியின் சாம்பலை கலந்து குடும்பத்திற்கு கொடுத்த பெண் - பகீர் சம்பவம்!
பெண் ஒருவர் பாட்டியின் சாம்பலை சாப்பிட்டது பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.
பாட்டி சாம்பல்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவரது பாட்டி கடந்த வருடம் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அவரது உடலை தகனம் செய்த பின்னர் கிடைத்த சாம்பலை ஒரு பாத்திரத்தில் சேமித்து வீட்டிலேயே வைத்துள்ளனர். அதை அந்த பெண் எடுத்து சாப்பிடவும் செய்திருக்கிறார்.
அதோடு, பாட்டி இறந்த துக்கத்தில் மொத்த குடும்பமும் இருந்த நிலையில், அவர்களது மனநிலையை மாற்றவும் அவர்களை ஆறுதல்படுத்தவும் முடிவு செய்த அந்தப் பெண், வீட்டில் வைத்திருந்த பாட்டியின் சாம்பலை எடுத்து தனது தாய் மற்றும் சகோதரருக்கு கொடுத்துள்ளார்.
பகீர் சம்பவம்
அந்த பெண் வேண்டுமென்றே தனது பாட்டியின் சாம்பலை சாப்பிட்டது மட்டுமல்லாமல் பாஸ்தா சாஸில் அதை கலந்து சகோதரனுக்கும் கொடுத்திருக்கிறார். இதை ஏன் செய்தார் என்ற காரணமாக அவர் கூறியதாவது, வழக்கமாக அண்ணன்-தங்கைக்குள் நடக்கும் சிறு சிறு விளையாட்டுகள்,
ஏமாற்று வித்தைகள் போல்தான் இதை செய்தேன் என சர்வ சாதாரணமாக கூறியுள்ளார். இது தொடர்பாக ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக அந்த பெண் பேசியிருப்பார். அதில், ஆமாம், தெரிந்தேதான் இதை செய்தேன். ஒரு ஜாலிக்காக இதை சாப்பிட்டு பார்த்தேன். இனி என் பாட்டி என்னோடு சேர்ந்து உயிர் வாழ்வார்.
இன்னொரு ரகசியத்தையும் நான் இப்போது சொல்கிறேன். இதற்கு முன் இந்த விஷயத்தை நான் யாரிடமும் கூறியதில்லை. நானும் என் சகோதரனும் சிறு வயதிலிருந்து ஒன்றாக சேர்ந்து வாழ்ந்ததில்லை. அவனிடன் ஃப்ராங்க் செய்தால் நன்றாக இருக்குமே என நினைத்தேன். அதனால் பாஸ்தா சாஸில் பாட்டியின் சாம்பலை கலந்தேன் என எந்த தயக்கமும் இன்றி தெரிவித்துள்ளார்.