உண்மையாவே பொண்ணா..? ரோபோ போல உணவு பரிமாறும் பணிப்பெண் - வைரல் Video!
ரோபோ போன்று ஒரு பணிப்பெண் உணவு பரிமாறும் காட்சிகள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
ரோபோக்கள்
உலகம் முழுவதும் பல துறைகளில் தற்போது ரோபோக்களின் சேவை என்பது அதிகரித்து வருகிறது. அந்தவகையில் சிறிய ஹோட்டல்கள் முதல் பெரிய ஹோட்டல்கள் வரை ரூம் சர்வீஸ் செய்வதற்கும் ரோபோக்கள் ஈடுபடுத்தப்படுகிறது.
மேலும், வாடிக்கையாளர்களை கவர்வதற்காக உணவு பரிமாறும் பணிகளிலும் ரோபோக்களை பயன்படுத்துகின்றனர். இதுதொடர்பான வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி மக்களை ஈர்த்து வருகிறது.
பணிப்பெண்
இந்நிலையில் சீனாவில் உள்ள ஒரு உணவகத்தில் ரோபோ போன்று ஒரு பணிப்பெண் உணவு பரிமாறும் காட்சிகள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த பெண் அச்சு அசல் ரோபோவை போலவே வாடிக்கையாளர்களுக்கு உணவை பரிமாறுகிறார்.
மேலும், ரோபோ போன்ற அவரின் துல்லியமான உடல் அசைவுகள், 'உண்மையாகவே இது பெண் தானா, அல்லது ரோபோவா என வாடிக்கையாளர்களை ஒரு நிமிடம் யோசிக்க வைக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.