குளிக்காமல் அடம்பிடிக்கும் கணவன் - நாற்றம் தாங்க முடியாமல் விவாகரத்து கேட்கும் மனைவி
கணவன் தினமும் குளிக்காததால் மனைவி விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
கணவன் செயல்
ஆக்ராவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அண்மையில் திருமணமாகியுள்ளது. அவரது கணவர் ராஜேஷ். இவர் மாதத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே குளிக்கும் பழக்கமுடையவர்.
மற்ற நாட்களில் கங்கை நீரை தலையில் தெளித்துக் கொண்டால் போதும் புனிதமாகி விடுகிறோம் என்பது அவரது நம்பிக்கையாக இருந்துள்ளது.
விவாகரத்து கோரிய மனைவி
ஆனால், கணவரிடமிருந்து வரும் உடல் துர்நாற்றத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் மனைவி அவரை குளிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால், 40 நாட்களில் 6 முறை மட்டுமே ராஜேஷ் குளித்துள்ளார். ஒருகட்டத்திற்கு மேல் மனைவி விவாகரத்து செய்ய முடிவெடுத்து நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
தொடர்ந்து குடும்ப நல ஆலோசகரை மேற்கோள்காட்டி கூறியிருப்பதாவது, பெண்ணின் குடும்பத்தினர் வரதட்சணை துன்புறுத்தல் புகாரளித்து விவாகரத்து கோரியுள்ளனர். அந்த பெண் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
கணவர்மனம் திருந்தி அவரது சுகாதாரத்தை மேம்படுத்த ஒப்புக்கொண்டார். இருப்பினும் அந்த பெண் இனி அவருடன் வாழ விரும்ப வில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அந்த தம்பதி ஒரு வாரத்துக்குள் ஆலோசனை மையத்துக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.