கணவர் தனது உடல் எடையைக் குறைக்க உதவவில்லை...விவாகரத்து கோரிய மனைவி!

Uttar Pradesh India Divorce
By Swetha Jun 26, 2024 01:00 PM GMT
Report

திருமணத்திற்கு முன்பு கொடுத்த வாக்குறுதியை கடைபிடிக்காததால் மனைவி விவாகரத்து கேட்டுள்ளார்.

 உடல் எடை

உத்தரபிரதேசத்தின் நியூ ஆக்ரா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு ஜிம் பயிற்சியாளருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் நேரில் பார்க்க முடிவு செய்துள்ளனர். அப்போது ஜிம் பயிற்சியாளரின் உடல் கட்டமைப்பை பார்த்து அந்தப் பெண் அவரை காதலிக்கத் தொடங்கியிருக்கிறார்.

கணவர் தனது உடல் எடையைக் குறைக்க உதவவில்லை...விவாகரத்து கோரிய மனைவி! | Wife Asks Divorce For Not Loosing Weight

ஒருகட்டத்தில் இந்தக் காதல் திருமணத்தை நோக்கிச் செல்ல அந்த பெண் திருமணத்திற்குப் பிறகு தனது உடல் எடையைக் குறைக்க ஜிம் பயிற்சியாளர் பயிற்சி அளிக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டிருக்கிறார். அவரும் இந்த கண்டிஷனுக்கு ஓகே சொல்ல, கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

திருமணத்திற்குப் பிறகு உடல் எடையைக் குறைப்பதற்கான பயிற்சிகளை கணவன் மனைவிக்கு அளித்துள்ளார். இருப்பினும், உடல் எடை குறையாமல் மனைவி அதே 75 கிலோவில் இருந்துள்ளார். இதனால் கடும் கோபமடைந்த மனைவி ஆக்ரா பகுதியில் உள்ள குடும்ப நல ஆலோசனை மையத்தில் மனு அளித்தார்.

விவாகரத்து கேட்ட மனைவி; தானமாக தந்த கிட்னியை திரும்பக் கேட்ட கணவன்- நீதிமன்றம் ட்விஸ்ட்!

விவாகரத்து கேட்ட மனைவி; தானமாக தந்த கிட்னியை திரும்பக் கேட்ட கணவன்- நீதிமன்றம் ட்விஸ்ட்!

விவாகரத்து 

அதில் உடல் எடையைக் குறைத்துக் காட்டுவதாகக் கூறி தன் கணவர் திருமணம் செய்து கொண்டார். ஆனால், உடல் எடை கொஞ்சம் கூட குறையாமல் அப்படியே இருக்கிறது. பொய்யான வாக்குறுதி கொடுத்து அவர் என்னை திருமணம் செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். இனியும் என்னால் அவருடன் வாழ இயலாது.

கணவர் தனது உடல் எடையைக் குறைக்க உதவவில்லை...விவாகரத்து கோரிய மனைவி! | Wife Asks Divorce For Not Loosing Weight

அதனால் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தருமாறு வழக்கு தொடர்ந்துள்ளார்.இது தொடர்பாக இருவருக்கும் குடும்ப நல ஆலோசனை சார்பில் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.

அதன்பிறகும் மனைவி தனது முடிவில் மிகவும் உறுதியாக இருப்பதாகவும், கணவனோ மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் அவர்களுக்கு ஆலோசனை வழங்கிய அமித் கவுர் தெரிவித்துள்ளா